×

கூட்டத்தில் ஜெட்லி பங்கேற்கிறார் ரூ.28,000 கோடி டிவிடெண்ட் ரிசர்வ் வங்கி இன்று முடிவு?

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டத்தில், நிதியமைச்சர் அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று பேசுகிறார். அப்போது, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.28,000 கோடி இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு உபரி நிதி கேட்டு வருகிறது. இது பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நடப்பு 2018-19 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு இடைக்கால டிவிடெண்ட்டாக ரூ.28,000 கோடி எதிர்பார்க்கிறது. கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இடைக்கால டிவிடெண்டாக ரூ.10,000 கோடியை வழங்கியது.

இந்த மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் ₹5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிஉதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியன் மத்திய வாரிய கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்கிறார். இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கி பேச இருக்கிறார். அப்போது இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படலாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jaitley ,meeting , Jaitley,part,meeting,dividend,RBI,today
× RELATED ஹாட்ரிக் வெற்றிக்கு கேகேஆர் ஆர்வம்; தடைபோடுமா டெல்லி கேப்பிடல்ஸ்?