×

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

புதுடெல்லி: ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதன்படி மாதம் ஒன்றுக்கு  1.25 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் மட்டுமே இறக்குமததி செய்யலாம். ஆனால் ஜனவரி மாதத்தில் இதை விட குறைவாக 2,70,500 பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் தாமதமாக வந்ததால்தான் இறக்குமதி அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடு நவம்பரில் இருந்தே அமலில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 10.4 சதவீதம் குறைந்துள்ளது. சராசரி இறக்குமதி அளவு 6 சதவீதமாக சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டாலருக்கு மேல் உயர்ந்து 14.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தடைக்கு முன்பு ஈரான் அளித்த அதிரடி தள்ளுபடிகள் காரணமாக இறக்குமதி உயர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Iran , Crude oil,imports,Iran,fell
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...