×

காஷ்மீர் மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம்: அலிகார் பல்கலை. அறிவுரை

அலிகர்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் காஷ்மீர் மாணவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பத்தை அடுத்து ஜம்மு மற்றும் வெளிமாநிலங்களில் காஷ்மீரை சேர்ந்த மக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் காஷ்மீர் மாணவர்கள் பல்கலை விடுதி, வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர் மோசின் கான் கூறுகையில், “பல்கலைக்கழக நிர்வாகிகள் வளாகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாத வகையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக வந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட காஷ்மீர் மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்றார். 3 மாணவர்கள் சஸ்பெண்ட்: பெங்களூரு ஆனேக்கல்லை அடுத்த சூரியா சிட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவன் கவுசிக் என்பவர் புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து தனது சமூக வலைத்தள பதிவில் இந்தியாவிற்கு ஆதரவாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இதை பார்த்த, காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு விடுதி அறைக்கு சென்று கவுசிக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் முகநூலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை பதிவிட்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த 3 மாணவர்களையும் கைது செய்தனர். செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir ,Aligarh University , Kashmir,students,Aligarh University,Advice
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...