×

டாப்சிலிப் வரகளியாறு முகாமில் சின்னதம்பி யானைக்கு சிகிச்சை

பொள்ளாச்சி: உடுமலை அருகே பிடிபட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப் வரகளியாறு முகாமில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.கோவை அருகே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையை, கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், டாப்சிலிப்பை  அடுத்த வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானையை, வனத்துறையினர்  கண்காணித்து வருகின்றனர். மேலும், உணவு பரிமாறவும், கவனிக்கவும்  பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சின்னதம்பி யானை அடைக்கப்பட்டுள்ள  கூண்டருகே, காட்டு யானைகள் வந்து விடாமல் இருக்க கும்கிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வரகளியாறு முகாமில் உள்ள  மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானைக்கு தினமும் இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், தென்னை ஓலைகள் மற்றும் கரும்பு உள்ளிட்ட உணவு  வழங்கப்படுகிறது. அவ்வப்போது கால்நடை மருத்துவ குழுவினர், பரிசோதனை  மேற்கொள்வார்கள். விரைவில்  சின்னதம்பி யானை, வளர்ப்பு யானையாக மாற்றப்படும்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi ,camp camp ,Topsilip , Treatment,Chinnathambi,elephant,Topsilip camp,
× RELATED கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு...