×

ஏழைகளுக்கு நாள்தோறும் 5 ரூபாய் தரும் எடப்பாடி திட்டம் எடுபடுமா?

கடந்த 2015ல் சென்னை வெள்ளம், அதையடுத்து சரியாக ஓராண்டில் வர்தா புயல்...இரண்டு பாதிப்புகளிலும் சிக்கித்தவித்த மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஜெயலலிதா, முறையே ரூ.5000, 2000 என்று கொடுத்தார். அவர் இப்படி கொடுத்ததால் ஓட்டுக்களை அள்ளினார் என்று பேசப்பட்டது. அதுபோல, இப்போது முதல்வர் எடப்பாடியும் ரூ.2000 கொடுக்க முடிவு செய்துள்ளார்.  ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று பலரும் சொல்லி வரும் நிலையில், ஆளும்  தரப்பில் இப்படி பணத்தை அளிப்பது வழக்கமாகி வருகிறது. இப்படி செய்வதால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்து விடப்போவதில்லை. அவர்களுக்கு தேவையான திட்ட பலன்களை முழுமையாக சென்றடைய வழி செய்வதே சிறந்தது என்று சொல்வோர் கருத்தை அரசு கவனத்தில் ெகாண்டதே இல்லை.

முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் தவிப்போர் பலர்; ரேஷனில் அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில் என்று அத்தியாவசிய பொருட்களை சரியாக வினியோகிக்காமல் இருப்பதை சரி செய்தாலே போதும். சத்துணவு திட்டம் முதல் அம்மா சிமென்ட் வரை எல்லா திட்டங்களும் அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே பல மாவட்டங்களில் முடங்கி விட்டன. திட்டங்கள் தீட்டுவதில் குறைவில்லை; ஒதுக்கீட்டிலும் குறைவில்லை. ஆனால், பலன்கள்...? தமிழக அரசே இப்போது ரூ.4 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதுவே மக்கள் தலையில் தான் விழுகிறது. ஒவ்வொருத்தரின், ஏன் பிறந்த குழந்தை தலையில் கூட ரூ.55 ஆயிரம் கடன் விழுந்துள்ளது. இப்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள எடப்பாடி அரசு, வறுமையில் தவிக்கும் மக்களுக்கு நாளுக்கு ரூ.5.47 ெகாடுப்பதால், (365 நாளுக்கு சேர்த்தால் 2000 ரூபாய்) வறுமையை நீக்கி விட  முடியுமா? ஊழல் புரையோடியுள்ள நிலையில், எடப்பாடியின் இந்த 2000 ரூபாய் திட்டம் தேர்தலில் மக்களுக்கு தரும் ‘ஓட்டுக்கு பணம்’ தான் என்று விமர்சிக்கிறார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : poor , poor,man,rupees,day,
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...