×

கொழும்பு விமானத்தின் பின் பக்க டயர் வெடிப்பால் அதிர்ந்த பயணிகள் விமானி சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை: கொழும்பு விமானம் டயர் இறங்கியபோது விமானத்தின் பின்பக்க டயர் பழுதானது. விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கொழும்பில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானம்  126 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 131 பேருடன் சென்னை வந்தது. அந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் தரை இறங்கியது. அது நிற்க வேண்டிய இடத்துக்கு அருகில் வந்தபோது விமானத்தின் பின்பக்க டயர்களில் ஒன்று வெடித்தது. அதனால் விமானம் சிறிது குலுங்கியது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ந்தனர்.

பின்னர் விமானி, சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்திவிட்டார். பின்பு இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். வழக்கமாக அந்த விமானம் 8.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு மீண்டும் 9.15க்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். அதன்படி அந்த விமானத்தில் செல்லை 147 பயணிகள் காத்திருந்தனர். பழுதடைந்த டயர் அகற்றப்பட்டு மாற்று டயர் பொருத்திய பின்பு விமானம் 2 மணிநேரம் தாமதமாக 11.15 மணிக்கு கொழும்பு புறப்பட்டுச் சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Colombo ,crash ,Side Tire , passenger plane, tire,Colombo,Aided,avoided,crash
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...