×

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் திட்டம் மூலம் 25 லட்சம் ஆவணங்கள் பதிவு 2.69 லட்சம் பேருக்கு வில்லங்கசான்று அனுப்பி வைப்பு

சென்னை: ஆன்லைன் திட்டம் அமலுக்கு வந்த 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது வரை 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 2.69 லட்சம் பேருக்கு வில்லங்கசான்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், அதன் பிறகு அந்த திட்டம் வேகம் எடுத்தது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஆன்லைன் பத்திரப்பதிவு  செய்வது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, சராசரியாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பத்திரங்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது பத்திரவு பதிவு அமல்படுத்தி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தற்போது 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் 4,44481ம், மதுரை 4,02,762ம், கோவை 3,91,530, சேலத்தில் 2,98,543ம், நெல்லையில் 2,74042ம், வேலூரில் 2,21,452, திருச்சியில் 1,99,752ம், கடலூரில் 1,78,071ம், தஞ்சாவூரில் 1,24,703 என 9 மண்டலங்களில் மொத்தம் ₹25 லட்சத்து 35 ஆயிரத்து 336 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரபதிவை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜனவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின்படி, கடந்த 16ம் தேதி வரை 2,81,931 பேர் வில்லங்க சான்று கேட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.இதில், 2,69,344 பேருக்கு வில்லங்க சான்று இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 1.1.1975க்கு முந்தைய ஆவணங்களை கேட்டு நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து 77,185 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 75084 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office , documents,registered,online,office,resident,villagers
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...