உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்இடி தெரு விளக்குகள் வாங்கியதில் ரூ.750 கோடி சுருட்டல்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு என வாங்கப்பட்ட எல்இடி தெரு விளக்குகளில் மட்டும் அதிக விலை நிர்ணயம், தரமற்றது மற்றும் கமிஷன் போன்றவை மூலம் மட்டும் ரூ.750 கோடி ஊழல் நடந்துள்ளது. அந்த பணத்தை ஊழல் செய்தவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 11 மாநகராட்சிகள் மற்றும் 124 நகராட்சிகளில் மொத்தம் 7.42 லட்சம் தெரு விளக்குகள் பராமரிக்கப்படுகிறது. இதை தவிர்த்து பேரூராட்சிகளில் 4.93 லட்சம், 12,154 ஊராட்சிகளில் 28.72 லட்சம் மற்றும் சென்னை மாநகராட்சியில் 2,77,662 தெரு விளக்குகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெருவிளக்குகளை ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும் தங்களுக்கு தேவையானதை வாங்கி பயன்படுத்தின.

அந்த வகையில் சோடியம் விளக்குகள், சிஎப்எல் விளக்குகள், குழல் விளக்குகள், சோலார் விளக்குகள் என வகைவகையாக பயன்பாட்டில் இருந்தது. இதனால், மின்கட்டணம் எகிறியது. அதை கட்ட முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறின.

இந்நிலையில் மின்கட்டண அளவை குறைக்கும் வகையில் பல்வேறு வகையான தெருவிளக்குகள் அனைத்தையும் அகற்றிவிட்டு மின்சேமிப்பு மற்றும் மின்கட்டண சுமையை குறைக்கும் வகையில் எல்இடி விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் கீழ் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகிறது. சென்னையில் கடந்த 2011-16, ரூ.634 கோடி செலவில் 1.57 லட்சம் தெரு விளக்குகள் புதிதாக மாற்றப்பட்டது. 2016-17, 2018,19 நிதியாண்டில் ரூ.119 கோடி செலவில் 21 ஆயிரத்து 539 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் கடந்த 2013-14ல் ரூ.322 கோடி செலவில் 1.10 லட்சம் விளக்குகள் அமைக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ.79.70 கோடி செலவில் சோடியம், குழல் விளக்குகளை அகற்றிவிட்டு 63,353 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டது. தற்போது வரை சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 2.54 லட்சம் தெருவிளக்குளில் 2.22 லட்சம் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டன. ஊரகப்பகுதிகளில் கடந்த 2015 முதல் 2017 வரை ரூ.600 கோடி செலவில் 17.06 லட்சம் எல்இடி விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன.

2017-18ம் நிதியாண்டு வரை ரூ.216 கோடி செலவில் 3.15 லட்சம் குழல் விளக்குகள் மாற்றப்பட்டுள்ளது. இதை தவிர்த்து பேரூராட்சிகளில் 54,975 தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த எல்இடி விளக்குகள் வாங்கியதில் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும் குழப்பம் இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் அரசு சொன்ன இடத்தில் சொன்ன விலையில்  எல்இடி விளக்குகளை வாங்கியது. மொத்தம் ரூ.1900 கோடி மதிப்பில் எல்இடி தெரு விளக்குகள் வாங்கியதில் சுமார் ரூ.750 கோடி அளவுக்கு அரசு பணம் ெகாள்ளையடிக்கப்பட்டு ெபரும் மோசடி நடந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 30 வாட்ஸ், 40 வாட்ஸ் எல்இடி தெரு விளக்குகள் வெளிச்சந்தையில் குைறந்த விலையில் கிடைத்த காலத்தில் அதை விட நான்கு மடங்கு விலை வைத்து வாங்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 30 வாட்ஸ் வாங்கிவிட்டு அதை 40 வாட்ஸ் விலையில் குறிப்பிட்டது. தரமற்ற எல்இடி பல்புகளை அதிக விலை கொடுத்து வாங்கியது. அவையும் சில வாரன்டிக்கு முன்பே பயனற்றுபோனது. அதற்கு பதில் மீண்டும் புது எல்இடி பல்பு வாங்கியது என்று முறைகேடுகளின் பட்டியல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் டேனியல் கூறியதாவது:ேகாவை வேட்டைகாரன்புதூர், ஓடியன்குளம் பஞ்சாயத்துப் பகுதிகளில் எல்இடி விளக்குகள் என்ன விலையில் வாங்கப்பட்டது என்பது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இரண்டு பஞ்சாயத்துகளிலும் தலா ஒரு 30 வாட்ஸ் எல்இடி விளக்குகள் ரூ.7 ஆயிரம் என்ற அதிகபட்ச விலையில் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அதன் ஒரிஜினல் விலையை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகம் அதாவது, 50 வாட்ஸ் எல்இடி தெரு விளக்கு தலா 1 ₹2400ம், 30 வாட்ஸ் எல்இடி தெரு விளக்கு தலா ₹1,400ம், 40 வாட்ஸ் எல்இடி தெரு விளக்கு தலா ₹1800க்கு வாங்க முடியும். மேலும் இந்த எல்இடி தெரு விளக்குகளுக்கு 1 வருடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சார்பில் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது வரை ரூ.1900க்கு கோடிக்கு மேல் எல்இடி தெரு விளக்குகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பல நூறு கோடி முறைகேடு நடந்து இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான், எல்இடி விளக்குகள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார். அரசின் கணக்குபடி 1900 கோடி ரூபாய்க்கு எல்இடி பல்புகள் வாங்கப்பட்டதாக அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலுக்கும் வெளி மார்க்கெட்டில் விற்கும் பல்பின் விலை, தரம் மற்றும் நிறுவனம் ஆகியவற்றை ஒப்பிடும்போது ரூ.750 கோடி அளவுக்கு மக்களின் பணம் முைறகேடாக அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: