×

மாதவரத்தில் குழாய்கள் பழுதால் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மாதவரம் திரு.வி.க. தெரு 1 முதல் 5 வது வரை சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு உள்ள பல குடிநீர் குழாய்களில், திருகு இல்லாமல் திறந்து கிடப்பதால் குடிநீர் வீணாகிறது. அப்படி வீணாகும் குடிநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்புகின்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வீணாகாமல்  இருக்க, துணி மற்றும் பிளாஸ்டிக்கை கொண்டு குழாய்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் குழாயின் அருகே வீணாகும் குடிநீர் தேங்கி நிற்பதால், அங்கு  கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக இங்கு உள்ள குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடிநீரை வீணாக்க வேண்டாம், குடிநீரை சேமியுங்கள், வீடுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்கள், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வையுங்கள் என்று குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், குழாய்களில் குடிநீர் வீணாவதை தடுக்கவும் அங்கு தேங்கியிருக்கும் குடிநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அறிவுரையும் ஆலோசனையும் பொதுமக்களுக்கு தானா இவர்களுக்கு இல்லையா. மேலும் குடிநீர் குழாய்களை  பராமரிக்க ஏராளமான மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள் ஆனால் பல இடங்களில் குழாய்கள் பழுதாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madhavaram, drinking water
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...