×

தந்தை கடத்தப்பட்டதாக போலீசில் பொய் புகார்: மகனிடம் விசாரணை

பெரம்பூர்: ஓட்டேரி நார்த் டவுன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மனீஷ் பேட்டாலா (20). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று காலை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘எனது தந்தை சேகன்லால் பேட்டலா (49), பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து, பணம் கேட்டு தனது தந்தையை கடத்தி சென்றனர். எனவே, எனது தந்தையை மீட்டு தர வேண்டும்,’’ என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, ‘‘கடந்த 5 வருடத்திற்கு முன், போருரை சேர்ந்த கோபி (42), வெள்ளவேடு பகுதியை சேர்ந்த  முனுசாமி (46) ஆகியோர் தலா ரூ.6 லட்சமும், ராபர்ட் என்பவர் ரூ.20 லட்சமும் சோகன்லாலிடம் கடன் பெற்றுள்ளனர். இதற்காக, மூவரும் வீட்டு பத்திரத்தை சோகன்லாலிடம் கொடுத்துள்ளனர்.

 அவர், அந்த மூன்று பத்திரத்தையும் கிண்டி இந்தியன் வங்கி கிளையில் வைத்து ரூ.1.20 கோடி பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன், வங்கியில் இருந்து பணம் கட்டவில்லை என நிலத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதுபற்றி சோகன்லாலிடம் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து மூன்று பேரும் கடந்த 6 மாதத்திற்கு முன், கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனிடைேய கோபி, முனுசாமி ஆகியோரிடம் பணம் தருவதாக சோகன்லால் இருவரையும் கிண்டிக்கு அழைத்துச் சென்று பிறகு வெள்ளவேடு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுபற்றி அறிந்த சோகன்லாலின் மகன் மனீஷ், அம்மா லதா தூண்டுதலின் பேரில் அப்பாவை கடத்தியதாக பொய் புகாரை அளித்தது தெரியவந்தது.  இது சம்பந்தமாக மனீஷ், லதா, கோபி, முனுசாமி ஆகியோரை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : False complaint, police, inquiry
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...