×

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இறுதி போட்டியில் இன்று ரயில்வே - ம.பி. மோதல்

ஹிசார்: தேசிய சீனிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் (ஏ டிவிஷன்_ இறுதிப் போட்டியில், ரயில்வே விளையாட்டு வாரியம் - மத்தியப் பிரதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. அரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் அரை இறுதியில் ரயில்வே விளையாட்டு வாரியம் - ஹாக்கி அரியானா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரயிவே அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது.

இரண்டாவது அரை இறுதியில் ஹாக்கி மத்தியப் பிரதேசம் - மகாராஷ்டிரா ஹாக்கி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் மத்தியப் பிரதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.
இன்று நடைபெறும் பைனலில் ரயில்வே விளையாட்டு வாரியம் - மத்தியப் பிரதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, காலை 9.00 மணிக்கு நடைபெறும் 3வது இடத்துக்கான போட்டியில் ஹாக்கி அரியானா - ஹாக்கி மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : National Senior Women's Hockey Final Clash , National Senior Women's Hockey,Railway,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...