×

சில்லி பாயின்ட்...

* டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்துக்குப் பிறகு அந்த அணியின் பேட் கம்மின்ஸ் தற்போது முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
* கத்தார் நாட்டில் 2022ல் நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரைக் காண, 1983 மற்றும் 2011ம் ஆண்டில் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ₹5 கோடி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ தற்காலிகத் தலைவர் சி.கே.கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* ஐசிசி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவது அவசியம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
* இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி மோதும் பயிற்சி போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிஜா வைத்யா, எஸ்.மேகனா, பாரதி புல்மாலி, கோமல் ஸன்சத், ஆர்.கல்பனா, பிரியா பூனியா, ஹர்லீன் தியோல், ரீமாலஷ்மி எக்கா, மனாலி தக்‌ஷினி, மின்னு மணி, தனுஜா கன்வர்.
* லா லிகா கால்பந்து தொடரில் ஜிரோனா அணியுடன் நேற்று மோதிய ரியல் மாட்ரிட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
* நட்சத்திர வீரர் நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்பும் வாய்ப்பு இல்லை என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
* புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மொகாலி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.
* 2வது ஒருநாள் போட்டியின்போது ஐசிசி நடத்தை நெறிமுறைகளை மீறி நடந்துகொண்ட நியூசி. வேகம் டிரென்ட் போல்ட், வங்கதேச வீரர் மகமதுல்லா இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Silly Point
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...