துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. டர்பன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 153 ரன் விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய குசால் பெரேரா, ஒரேயடியாக 58 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 40வது ரேங்க் பெற்றுள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தையும், செதேஷ்வர் புஜாரா 3வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்க்கிங்கில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 878 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.