பல்கேரியா அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை

சோபியா: இந்தியா - பல்கேரியா உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக நேற்று முன்தினம் அமைச்சர் சுஷ்மா பல்கேரியா சென்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பல்கேரியா செல்வது இது தான் முதல் முறையாகும். தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் எக்கடேரினா சாஹரிவாவை, அமைச்சர் சுஷ்மா சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா-பல்கேரியா இடையேயான உறவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக சென்ற அமைச்சர் சுஷ்மாவிற்கு, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்  எக்கடேரினா சாஹரிவா வரவேற்றார். பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் மற்றும் மருத்துவம், ஐடி, சுற்றுலா துறைகளில் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: