அங்கேயும் இதே பிரச்னைதான் மனைவிகளுக்குள் ஒத்துப்போகவில்லை இங்கிலாந்து இளவரசர்கள் பிரிகின்றனர்

லண்டன்: மனைவிகளுக்குள் ஒத்துப் போகாததால், இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம்-ஹாரி பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இன்னும் சில வாரத்தில் இது நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம்-ஹாரி இருவரும் அவரவர் மனைவிகளுடன் கென்சிங்டன் அரண்மனையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். தற்போது ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு ஏப்ரல்-மே மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கிடையே, திருமணத்திற்கு பிறகு மேகன், கென்சிங்டன் அரண்மனைக்கு வந்ததில் இருந்தே வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுடன் ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது. இதனால், 10 ஆண்டாக ஒரே வீட்டில் வசித்து வந்த வில்லியமும் ஹாரியும் இனி தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளனர். ஹாரி-மேகன் ஜோடிக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே அவர்கள் பிராக்மோர் காட்டேஜ் அரண்மனைக்கு குடியேற இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த பிரிவு முறைப்படி நடக்க இருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
Advertising
Advertising

இதைத்தொடர்ந்து, அறக்கட்டளை பணிகள், அரசவை கடமைகளை ஆற்ற வில்லியம்-ஹாரிக்கென தனித்தனி ஊழியர்களையும் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. தனது தந்தை சார்லசிடமிருந்து விரைவில் அரச பதவியை வில்லியம் பெற இருப்பதால் அவருக்கும் ஹாரிக்கும் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. அதனாலேயே இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், மனைவிகள் பிரச்னையே பிரிவுக்கு முக்கிய காரணம் என அரசவை தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் பிரிந்தாலும் கூட அரச குடும்பத்தின் அறக்கட்டளை பணிகளை மட்டும் இணைந்தே மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த அறக்கட்டளை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை மட்டும் வில்லியம்-ஹாரி இணைந்து பணியாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: