சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு இன்று விசாரணை

தி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் யாதவ் வழக்கு விசாரணை, இன்று தொடங்குகின்றது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது. வழக்கில் இன்று தொடங்கி வருகிற 21ம் தேதி வரை  விசாரணை நடைபெறும். இந்தியா தரப்பில் இன்று ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதிடுகிறார். நாளை பாகிஸ்தான் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படும். தொடர்ந்து 20ம் தேதி இந்தியாவும், 21ம் தேதி பாகிஸ்தானும் தனது வாதத்தை தாக்கல் செய்யும். சர்வதேச நீதிமன்றம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தனது முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நடக்கும் இந்த விசாரணை நீதிமன்ற இணையதளம் மற்றும் ஐக்கிய நாடுகள் இணைய தன டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: