தீ விபத்தில் 9 பேர் பரிதாப பலி

தாகா: வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தில் சிட்டகாங் பகுதியில் உள்ள பேரா மார்க்கெட் பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில் எதிர்பாராதவிதமாக நேற்று அதிகாலை தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை யாரும் உணரவில்லை. இதனால் குடிசை முழுவதும் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

Advertising
Advertising

அந்த பகுதியில் இருந்த சுமார் 200 குடிசைகளில் தீப்பற்றியது. அங்கிருந்தவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என அலறித்துடித்து வெளியே ஒடிவந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இந்த தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் உடல் கருகி பலியானார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: