×

சாத்தான்குளம் பகுதியில் நூதன முறையில் பணம் பறிக்கும் மர்ம நபர்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் வீடுகளுக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் முருகன்(39). விவசாய கூலித்தொழிலாளியான இவரது வீடு பழுதடைந்துள்ளதால் அதனருகில் புதியதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீடு கான்கிரிட் பலகை அடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன், அவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர். 8ம் வகுப்பு படிக்கும் மகனும் 10ம் வகுப்பு படிக்கும் மகளும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டனர். காலை 8.45 மணியளவில் டூவிலரில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முருகன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் முருகன் வீட்டிற்கு கான்கிரிட் பலகை அடிப்பதற்காக வந்துள்ளதாகவும் அவர்களது போனில் இருந்து அவருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி அவர் போனில் அடையாளம் தெரியாத அந்த நபர் முருகனிடம் கான்கிரிட் போடுவது விசயமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மறுநாள் வருமாறு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த நபர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் முருகனின் பிள்ளைகள் குறித்து கேட்டறிந்து, பள்ளிக்கு சென்ற முருகனின் மகனிடம் உங்கள் கான்கீரிட் கம்பிகள் கொண்டு லாரி வாடகை ரூ.5300 உன்னிடம் கேட்டு வாங்க உன் தந்தை கூறியதாக தெரிவித்துள்ளார். அதை நம்பிய அவன் ரூ.5300ஐ கொடுத்துள்ளான். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகனிடம் மகன், தன்னிடம் நீங்கள் கூறியதாக ஒருவர் பணம் வாங்கி சென்றுள்ளதாக கூறியுள்ளார். மகனை ஏமாற்றி அந்த நபர் பணம் மோசடியாக வாங்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுபோல கடந்த வாரம் சாத்தான்குளம் அப்பாவு நாடார் தெருவில் உள்ள ஓய்வுபெற்ற சத்துணவு சமையலாளர் சிறியபுஷ்பம் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த டிப்டாப் ஆசாமி உங்களுக்கு பென்சன் அரியர் தொகை வந்துள்ளதாகவும், அதற்கு நீங்கள் வங்கியில் வரவு வைப்பதற்கு ரூ.2 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என கூறி பணத்தை வாங்கி போலியான முகவரியை கொடுத்துவிட்டு வங்கியில் சென்று உங்கள் பாஸ்புக்கில் வரவு வைத்துக்கொள்ளுங்கள் என கூறி சென்றுவிட்டார். வங்கிக்கு சென்று சிறியபுஷ்பம் விசாரித்தபோதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.சாத்தான்குளம் பகுதியில் வீடுகளில் தனியாக இருக்கும் வயதானவர்கள், பூட்டி காணப்படும் வீடுகளை நோட்டமிட்டு நூதனமாக பணம் பறிக்கும் கும்பல் உலா வருவதாக கூறப்படுகிறது. ஆதலால் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Sathankulam , Sattankulam, Nutricula, Money, Mystery, Police
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...