×

சின்னப்பேராலியில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு

விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னப்பேராலியில், தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே, பெரியபேராலி ஊராட்சியில் பெரிய பேராலி, சின்னப்பேராலி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 850 குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சின்னப்பேராலியில் 350 குடியிருப்புகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் வாறுகால்கள் அனைத்தும் மண்மேவி கிடப்பதால், கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது.

ஊராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சின்னபேராலி தெருக்களில், வாறுகாலை தூர்வாராததால் சுகாதாரக்கேடு அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கழிவுநீரை மிதித்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, வாறுகாலை முறையாக தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  குடிநீர் விநியோகத்தை சீரமைக்க கோரிக்கை: கிராம மக்கள் குடிக்கவும், பிற உபயோகத்திற்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. போர்வெல்லில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மேல்நிலைத்தொட்டியில் ஏற்றி வழங்காமல், அப்படியே பம்ப் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, சின்னப்பேராலியில் வாறுகால் மற்றும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Smallpox, Sewer, Health
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!