×

நெல்லையப்பர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சுவாமி நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் 18ம் நூற்றாண்டு கட்டிட கலையை சேர்ந்ததாகும். இதனை நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னர் கட்டினார். இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுவாமி, அம்பாள் கோயிலை இணைக்கும் வகையில் சங்கிலி மண்டம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சன்னதியில் அமைந்துள்ளது ஆயிரம் கால் மண்டபம். இது 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் கல் தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டதால் இதனை ஆயிரம் கால் மண்டபம் என்று அழைப்பர்.

இந்த மண்டபத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா என இருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை மட்டும் திறக்கப்படுகிறது. பின்னர் இழுத்து மூடப்படுகிறது. இவைதவிர அறநிலையத்துறை ஊழியர்களுக்கான பயிற்சி ஏதாவது நடந்தால் இங்குதான் நடத்தப்படுகிறது. பின்னர் மண்டபம் மூடப்படும். மேலும் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட அரிய சுவாமி, அம்பாள் வரைபடங்கள் வைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் நெல்லையப்பர் கோயில் ஸ்தல வரலாறு, பஞ்சமூர்த்திகள் படங்கள், நெல்லுக்கு வேலியிட்டு காத்து நெல்லை என்று பெயர் வர காரணமாக அமைந்த வரலாற்று படங்கள், தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்களின் அம்மன் படங்கள் உள்பட சுமார் 400 படங்கள் மண்டப தூண்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஆயிரம் கால் மண்டபம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் பல அரிய படங்களை பக்தர்கள் பார்வையிட முடியாத நிலை தொடர்கிறது.

 மேலும் நமது முன்னோர்களின் படைப்பாற்றலின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆயிரங்கால் மண்டபம் குறித்து இளைய தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும். ஆகவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரம் கால் மண்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் வரைபடங்களை வைத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் நெல்லையப்பர் கோயிலிலும் ஆயிரம் கால் மண்டபத்தை பக்தர்கள் பார்வையிடும் வகையில் பராமரித்து அழகுபடுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது: கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இணை ஆணையராக இருந்த தனபால் ஆயிரம் கால் மண்டபத்தை பக்தர்கள் பார்வையிடும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் காலை மற்றும் மாலை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி மண்டம் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி ஆயிரங்கால் மண்டம் இழுத்து மூடப்பட்டதாக அறநிலையத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mandapam , Nellaiyappar Temple, Thousand Mandapam, devotees
× RELATED நீர்நிலையை பாதுகாத்திட கருவேல மரத்தை அகற்ற கோரிக்கை