புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர், 78 வாகனங்களில் கடந்த 14-ம் தேதி அவர்களின் முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி அதில் அகமது என்பவன், 100 கிலோ வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் வந்து, வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை தெரிந்துகொள்ள உலக நாடுகள் ஆர்வமுடன் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவிக்கையில், பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்கள், தங்களால் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் என்றும் இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: