×

புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியான படங்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியான படங்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த வியாழ கிழமை 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அரசு  நிலைபாட்டிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களின் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதாவது; பலியான வீரர்களின் குரூப் போட்டோ, கடைசி செல்பி மற்றும் கொல்லப்பட்டவர்களின் சிதைந்துபோன உடல் பாகங்கள் என சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகைப்படங்கள் போலியான பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவேற்றம் செய்பவர்களுக்கு துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போலி புகைப்படங்களை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRPF ,attack ,Pulwama , Pulwama attack, fake image, CRPF, warning
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...