×

புல்வாமா தீவிரவாத தாக்குதல்.. பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி உயர்வு: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும்படி உலக நாடுகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசு வர்த்தக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்து நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்தும் பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி டிவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார். வரி உயர்வு காரணமாக, பாகிஸ்தானின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani , Pulwama, terrorist attack, Pakistan, tax hike, federal government
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி