தங்கும் விடுதியில் சிறுமிகள் பலாத்காரம் நிதிஷ் குமாரிடம் விசாரணை சிபிஐ.க்கு நீதிமன்றம் உத்தரவு

முசாபர்பூர்: தங்கும் விடுதிகளில் நடைபெற்ற பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் விசாரணை நடத்தும்படி சிபிஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் தொண்டு நிறுவன நடத்தி வந்த தங்கும் விடுதிகளில் இருந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து  போக்சோ நீதிமன்றத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறுமிகளை பலாத்காரம் செய்வதற்கு முன்பாக மயக்க ஊசி செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அஸ்வனி என்பவர் போக்சோ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், `இந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மறைக்க சிபிஐ முயல்கிறது.  

Advertising
Advertising

முசாபர்பூர் முன்னாள் கலெக்டர் தர்மேந்திர சிங், முன்னாள் மண்டல கமிஷனர் அதுல்குமார் சிங் மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினால், இந்த சம்பவத்தில் அவர்களுக்குள்ள பங்கு என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்’ என தெரிவித்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் 2 அதிகாரிகளிடம் பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டார். இதனால், பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: