மாணவி பலாத்காரம் வழக்குபாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிளஸ் 1 மாணவி பலாத்கார வழக்கில் பாதிரியாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ேசா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ேகரள மாநிலம், வயநாடு நடுவயல் பகுதியை சேர்ந்தவர் ராபின் வடக்குன்சேரி (51). இவர் கண்ணூர் அருகே உள்ள கொட்டியூர் செயின்ட் செபஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வந்தார். இந்த சர்ச் கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இவர் மேலாளராகவும் இருந்தார். இந்நிலையில், இந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இந்த விஷயத்தை வெளியே தெரியாமல் அவர் மூடி மறைத்தார்.  கண்ணூர் கூத்துப்பறம்பில் சர்ச் நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனையில் மாணவி குழந்தை பெற்ெறடுத்தார். பின்னர், மாணவியும் குழந்தையும் வயநாடு வைத்திரியில் உள்ள அதே சர்ச் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Advertising
Advertising

இது குறித்த விபரம் கண்ணூரில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிக்கு தெரியவந்தது. அவர் கொட்டியூர் ேபாலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் ராபின் வடக்குன்சேரியையும், இதற்கு உடந்தையாக இருந்த 6 பேரையும் கைது செய்தனர். இந்த விசாரணையின்போது, பாதிரியாரை காப்பாற்ற மாணவியின் பெற்றோரே முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் தனது மகளின் கர்ப்பத்துக்கு நானே காரணம் என தந்தையே கூறினார். இதனால், இந்த வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தலச்சேரி போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதில், பாதிரியாருக்கு 3 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மற்ற 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டதும் அவரை காப்பாற்ற மாணவியின் தாய், தந்தையே முயற்சி செய்தனர். விசாரணையின்ேபாது பல்டியடித்த, பெற்றோர் மீது விசாரணை நடத்தவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: