நளினி- முருகன் சந்திப்புக்கு தடை

வேலூர்:  ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் கடந்த 7 ம்தேதி முதலும் அவரது மனைவி நளினி கடந்த 9ம் தேதி முதலும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வேலூர் சிறைத்துறை சரக டிஐஜி ஜெயபாரதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருவரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு ஒரு முறை நளினி- முருகன் சந்திப்பது வழக்கம். ஆனால் சிறைவிதிகளை மீறி இருவரும் உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களின் சந்திப்புக்கு சிறை நிர்வாகம் தடைவித்துள்ளது. இதனால் நேற்று நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குறைதீர் கூட்டம்