போலீஸ் நிலையத்தில் புகுந்து சாராய வியாபாரியை மீட்ட 9 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர்அருகே பழையவலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜா (43). சாராய வியாபாரி. இவர் அங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு புதுவை மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக வைப்பூர் போலீசார் ராஜாவை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதையறிந்த ராஜாவின் நண்பர்கள் ராஜாவின் நண்பர்கள் 9 பேர் நேற்று முன்தினம்  இரவு 10 மணி அளவில் மவைப்பூர் காவல்நிலையத்திற்குள்  கும்பலாக நுழைந்தனர். அங்கு பணியிலிருந்த போலீசாரை மிரட்டி ராஜாவை அத்துமீறி அழைத்து சென்றனர். இதுகுறித்து  எஸ்.பி. துரைக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் இரவோடு இரவாக ராஜா, நண்பர்கள் 8 பேரை கைது செய்தனர். பின்னர் திருவாரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: