×

பாகிஸ்தான் அரசு நடவடிக்கை இந்திய பாடலுக்கு நடனம் பள்ளியின் அங்கீகாரம் ரத்து

கராச்சி: பாகிஸ்தான் பள்ளியில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனமாடியதால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வாரம் பல்வேறு நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்திய தேசியகொடி பறக்கும் பின்னணியில், பள்ளி மாணவர்கள் இந்திய பாடலுக்கு நடனமாடினர். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் குழுவை அமைத்து சிந்து மாகாண அரசு உத்தரவிட்டது. அதில், பாகிஸ்தானின் கவுரவத்தை குறைக்கும் வகையிலும், இந்திய கலாசாரத்தை ஊக்குவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க கூடாது தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாகாண அரசு உத்தரவிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Pakistani ,Indian , Pakistan government, Indian song, dance school, cancels recognition
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...