ரவுண்டு டேபிள் கோல்ப் போட்டி

சென்னை: மெட்ராஸ் ரவுண்டு டேபிள் அமைப்பு சார்பில் நலிந்தோர் நல நிதி திரட்டுவதற்காக  சென்னையில் கோல்ப் போட்டி நடைப்பெற்றது. மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்டு டேபிள் -10 என்ற அமைப்பு சார்பில் சென்னை போரூரில் 20 படுக்கைகள் கொண்ட இலவச டயாலிசிஸ் மையம் கட்டப்படுகிறது. தண்டலத்தில் இலவசப் பள்ளியும் நடத்தப்படுகிறது. இதற்காக நிதி திரட்டும் வகையில், சென்னையில் கோல்ப் போட்டி நடத்தப்பட்டது. காஸ்மோ கோல்ப் திடலில் நடந்த இப்போட்டியில் தலா 12 பேர் கொண்ட 9 அணிகள் பங்கேற்றன. தொழில்முறை வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: