இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா மீண்டும் சாம்பியன்

நாக்பூர்: இந்திர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் விதர்பா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வென்று பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. விதர்பா முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்தது. 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இதர இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 374 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.  இதைத் தொடர்ந்து, 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விதர்பா அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் விதர்பா 103.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. சஞ்சய் 42, டெய்டே 72, கணேஷ் சதீஷ் 87 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். வாத்கர் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்ததால் விதர்பா அணி இரானி கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்று அசத்தியது. அந்த அணி ரஞ்சி கோப்பை மற்றும் இரானி கோப்பையை தொடர்ந்து 2வது ஆண்டாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: