கப்தில் அதிரடியில் நியூசி. 2வது வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 49.4 ஓவரில் 226 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முகமது மிதுன் அதிகபட்சமாக 57 ரன் விளாசினார். சப்பிர் ரகுமான் 43, முஷ்பிகுர் ரகிம் 24, சவும்யா சர்க்கார் 22, மிராஸ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசி. பந்துவீச்சில் பெர்குசன் 3, டாட் ஆஸ்டில், நீஷம் தலா 2, ஹென்றி, போல்ட், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 36.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்து எளிதாக வென்றது. மார்டின் கப்தில் 118 ரன் (88 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), நிகோல்ஸ் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் கேன் வில்லியம்சன் 65, ராஸ் டெய்லர் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி போட்டி டுனெடின் மைதானத்தில் 20ம் தேதி நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: