ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின்நிதி ஆதாரங்களை முடக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

கிம்முடன் 2வது சந்திப்பு வெற்றிகரமாக இருக்கும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா - வடகொரியா இடையே நீடித்து வந்த மோதல், கடந்தாண்டு ஜூனில் தீர்ந்தது. அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஆகியோர் சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். ‘இது அற்புதமான சந்திப்பு’ என டிரம்ப் கூறினார். இந்நிலையில், இரு தலைவர்களும் வியட்நாமில் வரும் 27, 28ம் தேதிகளில் 2வது முறையாக சந்தித்து பேசுகின்றனர். இது குறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘முதல் சந்திப்பு போல் இந்த சந்திப்பும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். முதல் சந்திப்புக்குப்பின் வடகொரியா, ராக்கெட் குண்டுகளையும், ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதித்து பார்க்கவில்லை. கொரிய போரில் சிக்கிய அமெரிக்க வீரர்கள், பிணைக் கைதிகள் ஆகியோரை நாங்கள் திரும்ப பெற்றோம். எங்களின் 2வது சந்திப்பும் வெற்றிகரமாக இருக்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: