போருக்குப் பிறகும் அமலில் உள்ள தீவிரவாத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் நிர்பந்தம்

கொழும்பு: இலங்கையில் அமலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது. சந்தேகப்படும் நபர்களை கைது செய்து, காலவரையின்றி தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க முடியும். விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போர் முடிவுக்கு வந்த பிறகும் இந்த சட்டம் அமலில் இருப்பது தேவையில்லை  என மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன்-இலங்கை ஆகியவை இணைந்து நடத்தும் 22வது கூட்டம் பிரசல்ஸ் நகரில் கடந்த 14ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை அமல்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளையும்,  இலங்கை போரில் காணாமல் போனவர்கள் பற்றி தகவல் சேகரிக்க தனி அலுவலகமும், நஷ்டஈடு வழங்க தனி அலுவலகமும் அமைக்கப்படுவதை ஐரோப்பிய யூனியன் வரவேற்றது.

 இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது கடந்த 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை மீண்டும் செயல்படுத்தப் போவதாக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதற்கும் ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: