அமெரிக்காவில் ஊழியர் ஆத்திரம் வேலை பறி போனதால் 5 பேர் சுட்டுக்கொலை: போலீஸ் தாக்குதலில் பலியானார்

சிகாகோ: அமெரிக்காவில் தொழிற்சாலை வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். போலீஸ் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அமெரிக்கா நாட்டின் இல்லினாய் மாகாணத்தில் உள்ளது அரோரா. தொழிற்சாலை நிறைந்த பகுதியான இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 1.28 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் திடீரென அங்கிருந்த தொழிலாளர்களை சரமாரியாக சுட்டார். இதில் தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மர்மநபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் போலீசார் மீதும்  துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.  இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடியில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் பெயர்  கேரி மார்ட்டின் (45) என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘தாக்குதலில் ஈடுபட்ட கேரி மார்ட்டின்  அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம்’’ என்றனர். தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலை முறியடித்த போலீசாரின் திறமையை அதிபர் டிரம்ப் பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: