தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவில் முட்டைக்கு மாற்றான வாழைப்பழம் திட்டம் முடக்கம்

கோவை : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவில் முட்டை சாப்பிடாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 51.96 லட்சம் மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். பள்ளி நாட்களில் மதிய சத்துணவில் ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தலா ஒரு முட்டை வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 210 நாள் சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவ-மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு சமூக நலத்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு வாழைப்பழத்திற்கு 1.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலைக்கு அழுகிப்போன வாழைப்பழம்கூட கிடைக்காது, இந்த விலையில் இத்திட்டத்தை ெதாடர முடியாது என இத்துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து, கடந்த ஆண்டு ஒரு வாழைப்பழத்திற்கான ெதாகை 3.50 ஆக உயர்த்தப்பட்டது. மாநில அளவில் முட்டை சாப்பிடாத 12,946 மாணவ-மாணவிகளுக்கு, இந்த விலை அடிப்படையில் தினமும் வாழைப்பழம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்காக, ஒரு நாளைக்கு 45,311 நிதி ஒதுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 210 நாள் என்ற அடிப்படையில் 95.15 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மாவட்ட வாரியாக இத்தொகை முறையாக பிரித்து வழங்கப்படவில்லை. வாழைப்பழத்துக்கு என ஒதுக்கிய நிதி, மாவட்டம் வாரியாக சத்துணவு மையங்களுக்கு வந்து சேருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, பயன்படுத்தியதாக கணக்கு காட்டப்பட்டு, முறைகேடு ெசய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் நடைமுறையில் இருப்பதே தங்களுக்கு தெரியாது என பெரும்பாலான சமையலர்கள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: