உடலையும், மனதையும் வருடும் கூர்க்

இரண்டு சுண்டு விரல்கள் அளவுக்கு ஒரு பறவை. கிரீச், கிரீச் என்று அவைபோடும் சத்தம், அந்த அதிகாலைவேளையில் மனதை வருடும் ஒரு இன்பம்.ஜோடியுடன் காலைவேளையிலேயே இரைத்தேட கிளம்பும் இரட்டை வால் பறவை. பஞ்சவர்ண  கிளிக்கு தங்கை என்றுசொல்லப்படும் பல்வேறு நிறம்கொண்ட அளவில் சிறிய கிளி… இப்படி அதிகாலைவேளையில் பறவைகளின் இசைக் கச்சேரியையும், மலைகளில் இருந்து புகுந்து வரும் காற்றின் புனலோசையும்சேர்ந்து,  வருடிச்செல்லும் வெண்பஞ்சு பனி, காதலியின் கைவிரல்பட்ட சிலிர்ப்பை ஏற்படுத்தும் கொஞ்சல். இவை எல்லாம், கர்நாடக மாநிலம் கூர்க்கில் கிடைக்கும் என்றால் மிகையல்ல. அங்கு உள்ள தமாரா ரெசார்ட்டில், இயற்கை அன்னையின் பரிசுகள் அவ்வளவும் உண்டு. கர்நாடகாவின் மைசூர் அல்லது கேரளாவின் குன்னூரில் இருந்து சுமார் இரண்டரை மணிநேரத்தில் வருகிறது இந்த ரெசார்ட். காபி தோட்டத்தின் பாதையில்நெடிதுயர்ந்த மரங்களுக்குபோட்டியாக அமைக்கப்பட்ட மரத்தூண்களின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜூக்கு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரி வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடப்படுகின்றனர்.

அதிகாலையிலேயே பறவைகளை காண  அழைத்து செல்கின்றனர்.கைதேர்ந்த நிபுணர், வாடிக்கையாளர்கள் அனைவரது கைகளிலும் நவீன  பைனாக்குலரை தந்துவிடுகிறார். உணவகத்துக்கும் கூடபேட்டரி காரிலேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  வலது பக்கத்தில் பாய்ந்து விழும் நீர்வீழ்ச்சிக்கு இடையே மனதுக்கு பிடித்தமான உணவு வகைகளைகேட்டு வாங்கி சாப்பிடலாம். தலைமை செப் சஞ்சய் வாடிக்கையாளர் எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும், அவர்கள்கேட்கும் உணவு வகைகளை அதிகபட்சம் 20 நிமிடத்தில் சமைத்து தருவது அதிசயம் தான். காலை  7.30 மணிக்கே, சுடச்சுடச் கூர்க் சிக்கன் கறி, மட்டன் கறி, கப்பா புட்டு, அரிசியில்செய்த சப்பாத்தி, சூப் வகைகள்,பொங்கல், பூரி என்று நாக்கில் எச்சில் ஊறும் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. பொறுமையும், உணவின் மீது ரசிப்புத் தன்மையும்கொண்டவர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி. மதியமும் இதே தான். அசைவ உணவில் ஊர்வன, பறப்பன, மிதப்பன முதல்,சைவத்தில் கொத்தமல்லி துவையல் முதல் முழு காலிப்பிளவரை மசாலா போட்டு,  எண்ணெய்யில் வறுத்தெடுத்துகொடுக்கும் உணவு வரை எல்லாமே கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களில் பெண்களுக்கு மாலையில் சமையல் வகுப்பறை நடக்கிறது. விருப்ப பப்பட் ஆண்களும் இதில் கலந்துக் கொள்ளலாம். பாரம்பரிய அசைவ, சைவ உணவுகளை ருசியுடன்செய்ய கற்றுத்தரப்படுகிறது. சமையல் வகுப்புக்கு பின்பு  யோகாசனம் வகுப்பு நடக்கிறது. திடகாத்திரமான ஆண்,பெண்களுக்கு இங்கு மலையேற்ற பயிற்சியும் நடக்கிறது.

மனதுக்கு புத்துணர்ச்சியை அள்ளித்தரும் இன்னொரு விஷயம். தாவரங்களுக்கு இடையிலான நடை. பிளானடேஷன் வாக் என்றபெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்த நடையில், டார்ச் ஜின்சர், எலிபென்ட் பனானா, ஒற்றை முக ருத்திராட்சம், காபி வகைகள் என்று காணக்கிடைக்காத தாவர,செடி,கொடி வகைகளை காண முடிகிறது. ஒரு சிறந்த காபித்தூளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: