சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்

காளையார்கோவில்: காளையார்கோவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வெறிநாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவிலில் உள்ள வீதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்லுபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை கடிக்கின்றன. இதனால் தெரு மற்றும் சாலை பகுதிகளில் செல்ல மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

மாநில நெடுஞ்சாலையிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதினால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சில மாதங்களில் பொது மக்களை அதிகளவில் நாய்கள் கடித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: