×

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் அவர் சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி, கோவை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்ற விவரம்:
* பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண் இயக்குனராக மாற்றம்
* ஓமியோபதி ஆணையராக இருந்த பியூலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலராக மாற்றம்
* திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை ஆட்சியராக மாற்றம்
* சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்
* திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசு நியமனம்.
* ஐஏஎஸ் அதிகாரி நாகரஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
* கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம்
* வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம்
* தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம்
* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம்
*  பத்திரப்பதிவு ஐ.ஜி குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம்
* நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம்
* கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம்
* தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம்
* சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Radhakrishnan ,IAS officers ,Tamil Nadu , Health Department, Radhakrishnan, IAS, Transfer
× RELATED நாம் வாக்களித்தால் என்ன மாற்றம்...