×

CRPF வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

அரியலூர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம்,  சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் வீர மரணம் அடைந்தனர். இவர்களது உடல் அவரவர் சொந்த ஊர்களில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுப்பிரமணியன் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ், கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி. முரளிராம்பா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சுப்பிரமணியன் உடல் சவலாப்பேரி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சவலாப்பேரி கிராமம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

விவசாய நிலத்தில் நல்லடக்கம்
எம்ஏ.,பி.எட். பட்டதாரியான சிவசந்திரன், கடந்த 2010ம் ஆண்டு சிஆர்பிஎப், படைவீரராக சேர்ந்தார். தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரன் உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி,  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கார்குடி கிராமத்திற்கு வந்து சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிவசந்திரனின் உடல் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRPF Players Sivachandran ,Subramanian , CRPF, Sivachandran, Subramanian, terrorist attack,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...