அமில மழையினால் ஏற்படும் பாதிப்புகள்

* தகவல் பலகை

அமிலமழை பெய்யும் என்பது உண்மையே. உலகின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. தூய்மையான நீரின் பிஎச்.மதிப்பு7 ஆகும். 7க்கு குறைவாக இருந்தால் அமிலத்தன்மையோடும், 7க்கு அதிகமாக இருந்தால் காரத்தன்மையோடும் இருக்கும். அமிலமழைநீரில் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அதிகளவு கலந்திருக்கும்.

மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கந்தகடைஆக்சைடு, நைட்ரஜன்சல்பைடு போன்றவையே அமிலமழைக்கு முக்கிய காரணமாகும். இந்த வாயுவோடு மேகத்தில் உள்ள நீர்த்துளி வினைபுரிந்து கந்தக ட்ரைஆக்சைடாக மாறுவதும் பின்னர் கந்தக அமிலமாக மாறுவதும் வேகமாக நடைபெறுகிறது. எனவே இந்த இடத்தில் பெய்யும் மழை அமிலமழையாக பொழிகிறது.

மும்பை செம்பூர் பகுதியில் பெய்த அமிலமழையின் பிஎச்.மதிப்பு 3.5ஆக இருந்துள்ளது. இந்த அமில மழையின் நீர் மனிதனுக்கு நுரையீரல் சம்பந்தமான பல நோய்களை உருவாக்கும். உலோகக்குழாய்களில் தொடர்ந்து அனுப்பப்படும் நீரும் அமிலத்தன்மையோடு காணப்படும். இந்நீரை மனிதன் தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்புகள், எலும்பு பலவீனப்படுதல் போன்ற பாதிப்புகள் வரலாம். குழந்தைகளுக்கு பேதி ஏற்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: