சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடக்கம் : பொறியாளர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை : சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சிமென்ட் விலை ஏற்றத்தை கண்டித்து சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக வெங்கடாசலம், தயாநிதி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதேபோல், சிமென்ட் விலை ஏற்றத்தாலும் கட்டுமான தொழில் சரிவை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி வரியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் தங்களின் தொழிலை விட்டும் வெளியேறும் சூழ்நிலையில் உள்ளார்கள்.

ஏற்கனவே இந்த தொழிலில் இருந்து பலர் வெளியேறியுள்ளார்கள். தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சிமென்ட் விலை ஏற்றத்தில் அரசு தலையிட்டு சிமென்ட் விலையை அரசே நிர்ணயம் செய்வதில் கவணம் செலுத்த வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: