சாலிகிராமத்தில் அதிகாலை பரபரப்பு பர்னிச்சர் குடோனில் தீ விபத்து

சென்னை: சாலிகிராமம் ராஜாஜி காலனி ஏ.வி.எம்.தெருவை சேர்ந்தவர்  பெரியசாமி (48). இவர் அதே பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். மேலும், கடைக்கு தேவையான பொருட்களை மொத்தமாக கொள்முதல் ெசய்து கடையின் பின்புறம் குடோனில் வைத்துள்ளார். இந்நிலையில் ேநற்று அதிகாலை திடீரென குடோனில் இருந்து கரும் புகையுடன் தீ வெளியேறியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், அசோக் நகர் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் வந்தனர். கட்டில் மற்றும் மெத்தைகள் குடோனில் அதிகளவில் இருந்ததால் தீ சிறிது நேரத்தில் மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுப்பட்டுத்தினர். மேலும், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குடோனில் இருந்த கட்டில், மெத்தைகள், சோபா செட், பிளாஸ்டிக் மற்றும்  மரத்தினால் ஆன சேர், டேபிள்கள் என பல பொருட்கள் எரிந்து நாசமானது. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மற்றொரு சம்பவம்:  கொருக்குப்பேட்டை நாகாத்தமன் கோயில்  தெருவை சேர்ந்தவர் திவ்யானந்தம் (48). நேற்று  அதிகாலையில் திடீரென இவர்களது வீட்டு பூஜை அறையில் இருந்து புகை வந்தது. உள்ளே தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் இதை பார்த்து  அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்  கொடுத்தனர். அதன்பேரில், வியாசர்பாடி சத்திய மூர்த்திநகரில் இருந்து  தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர்  புகை வந்த அறையில் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: