பரங்கிமலை பகுதியில் 3 லட்சம் குட்கா பறிமுதல்

ஆலந்தூர்: மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது, அட்டை பெட்டிகளில் 600 கிலோ போதை பொருட்கள் பதுக்கி கடத்தப்படுவது தெரிந்தது. இதன் மதிப்பு 3 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டி வந்த பரங்கிமலை வெள்ளி தெருவை சேர்ந்த  சின்னத்துரை (31), என்பவரை கைது செய்தனர். விசாரணையில், சின்னதுரை குட்கா பொருட்களை நந்தம்பாக்கம், பரங்கிமலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.  அவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

5 கிலோ கஞ்சா பறிமுதல்: மாதவரம் பேருந்து நிலையம் அருகே, பையில் 5 கிலோ கஞ்சாவுடன் திரிந்த, கேரளா மாநிலம் எர்ணாகுளம் தொப்பம்பாடி தெருவை சேர்ந்த அசாருதீன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்து கேரளா கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: