அனுமதியின்றி சென்னையில் தங்கிய இலங்கை தமிழர் கைது

சென்னை: இலங்கை யாழ்ப்பானம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல இலங்கையில் உள்ள ஏஜென்ட் மூலம் சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா, நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஏஜென்ட் ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் வேறு வழியின்றி சென்னை வந்து  சுகி என்பவருடன் மேடவாக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கினார். இதற்கிடையே சுகியின் விசா காலம் முடிந்ததால் அதை புதுப்பிக்க சென்னை சாஸ்திரி பவனில் உள்ள குடியுரிமை துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்ேபாது சுகியுடன், சகிகுமார் குடியுரிமைத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதை பார்த்த அதிகாரிகள் சகிகுமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், முறையான அனுமதியின்றி சென்னையில் தங்கி இருந்த சசிகுமாரை பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: