கீழ்கட்டளை, அனகாபுத்தூர், அஸ்தினாபுரத்தில் துணை மின்நிலையங்கள் வேண்டும்

சென்னை: அஸ்தினாபுரம், கீழ்கட்டளை, அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார். சட்டப் பேரவையில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதியில் 7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு போதிய அளவில் துைண மின் நிலையங்கள் இல்லை. எனவே, அஸ்தினாபுரம், கீழ்கட்டளை, அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இன்னும் பணிகள் நடைபெறவில்லை.

அமைச்சர் தங்கமணி: பல்லாவரம் தொகுதியில் 3 துணை மின் நிைலயங்களுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டன. மின் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கான கோப்புகள் நிலுவையில் உள்ளன. கோப்புகள் கலெக்டருக்கு அனுப்பி அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3500 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.  இவ்வாறு விவாதம் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: