நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு

லண்டன் : வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா  பல்வேறு வங்கிகளிலும் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடன்களை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், மல்லையாவை  இந்தியா கொண்டு வருவதற்காக சிபிஐ, அமலாக்கதுறை உள்ளிட்டவை மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில், தன்னை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்ட 14 நாட்களுக்குள் அதை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றத்தை  அவர் அணுகியுள்ளார்.  அதில், தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு  செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த மனு நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இரண்டு முதல் 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆவணங்கள் அடிப்படையிலேயே நீதிபதி முடிவெடுப்பார். மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அடுத்த சில மாதங்களில் வழக்கின் பிரதான விசாரணை தொடங்கும். மேல்முறையீட்டு அனுமதி கேட்கும் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் மீண்டும் மனுவை புதுப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: