×

போர் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுக்கு லட்சம் குழந்தைகள் பலி

மூனிச்: ஜெர்மனியின் மூனிச் நகரில், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற சர்வதேச அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், போர் மற்றும் அதன் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகளினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட 10 நாடுகளில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போர் காரணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

கொல்லப்படுவது, உடல் உறுப்புகளை முடமாக்குவது, ஆயுத கும்பல்களால் கடத்தப்படுவது அல்லது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தலை குழந்தைகள் எதிர்கொள்கின்றன. போரினால் பாதிக்கப்படும் மோசமான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ, ஈராக், மாலி, நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் உள்ளன. போரின் மறைமுக விளைவு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். 21ம் நூற்றாண்டில் மிக எளிமையான கொள்கைகள் மற்றும் தார்மீக நெறிகளில் இருந்து பின்னோக்கி செல்கிறோம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. போரில் குழந்தைகளும், பொதுமக்களும் இலக்காக கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Millions ,children ,war , Millions of children die, each year, due to war
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...