×

போக்ரான் அருகே விமானப் படை இன்று பிரமாண்ட போர் பயிற்சி

போக்ரான்: ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் ‘வாயு சக்தி-2019’ என்ற பெயரில் இந்திய விமானப்படை இன்று முழு அளவிலான பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. விமானப்படை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘வாயு சக்தி’ என்ற பெயரில் முழு அளவிலான போர் பயிற்சியில் ஈடுபடும். முதல் பயிற்சி கடந்த 1953ம் ஆண்டில் டெல்லி தில்பத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டுக்கு பின் இந்த பயிற்சி  ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை அருகேயுள்ள போக்ரானுக்கு மாற்றப்பட்டது.

வாயு சக்தி-2019 போர் பயிற்சி போக்ரானில் இன்று நடக்கிறது. . சுமார் 2 மணி நேரம் நடக்கும் இந்த பயிற்சியில் மிக்-29, ஜாகுவார், சுகாய், மிராஜ்-2000 போன்ற போர் விமானங்களும், ஏஎன்-32, சி130 போன்ற சரக்கு விமானங்களும், எம்.ஐ-17, எம்.ஐ-35 ரக ஹெலிகாப்டர்களும் பங்கு பெறுகின்றன. ஆகாஷ் ஏவுகணைகளை வீசுதல், ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது, மிக்-29 விமானத்திலிருந்து தரை இலக்கு தாக்கப்படுவது போன்ற பயிற்சிகள் முதல் முறையாக இன்று மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானம் மற்றும் போர்க்கருவிகள் போன்றவை இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ன. இந்த போர் பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air Force ,Pokhran ,Great War , Air Force ,Pokhran, training the Great War
× RELATED ரபேல் போர் விமான பேரத்தில் தொடர்புடைய...