×

எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு

வாஷிங்டன் : அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டிய  நிதியை பெறுவதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப்,  அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் நீடிப்பதால், இதனைத் தடுக்க எல்லைச் சுவர்  எழுப்ப வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், “அதிபர் டிரம்ப் ஏற்கனவே கூறியது போன்று எல்லைச் சுவர் எழுப்புவதற்காக தேவைப்படும் நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளார். . இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இது பற்றி நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கோனெல், “நான் அதிபர் டிரம்ப்பை சந்தித்தேன். சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட இருக்கிறார்.   நாடாளுமன்றத்தின் இதர உறுப்பினர்களிடம் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தேன்” என்றார்.

அதேசமயம், அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து செனட் அவையின் சிறுபான்மையினத் தலைவர் சக் ஷ்க்யூமெர், அவைத் தலைவர் நான்சி பெலோசி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “இது சட்டத்துக்கு முரணானது. எல்லைச் சுவர் கட்டுவதற்கான பணம் மெக்சிகோவிடம் இருந்து பெறப்படும் என்று முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத டிரம்ப், தற்போது தனது அதிபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது தவறான முடிவாகும். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரங்களை காப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் உடல்நிலை நன்றாக உள்ளது

அதிபர் டிரம்ப்பின் உடல் பரிசோதனைக்கு பின்னர் தலைமை மருத்துவர் ஷான் கோன்லி வெளியிட்ட அறிக்கையில், “முழு உடல் பரிசோதனையில் அதிபர் டிரம்ப்பின் உடல்நிலையில் மாற்றமோ அல்லது குறிப்பிடத்தக்க எந்த நோய்க்கான அறிகுறியோ காணப்படவில்லை. . கடந்த ஆண்டு முழு உடல் பரிசோதனையின் போது இருந்ததை விட தற்போது 4 கிலோ எடை அதிகரித்துள்ளார். அதிகளவு நொறுக்கு தீனிகளை உண்பதால் இந்த பிரச்னை உள்ளதே தவிர, பயப்படும்படி எதுவுமில்லை. டிரம்ப் புகை, குடி பழக்கம் இல்லாதவர். வெள்ளை மாளிகை வளாகத்தில் நீண்ட நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதும், கோஃல்ப் மைதானத்தில் விளையாடுவதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : border , Emergency Declaration, Trump Action,build a block on the border
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...