பிக் பாஷ் டி20 தொடர் பைனலில் மெல்போர்ன் ரெனகேட்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட, மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி தகுதி பெற்றது. னெல்போர்ன், டாக்லேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2வது அரை இறுதியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற ரெனகேட்ஸ் முதலில் பந்துவீசியது. சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் ஜோஷ் பிலிப் 52 ரன் (31 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), டேனியல் ஹியூஸ் 52 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். ஜேம்ஸ் வின்ஸ் 28 ரன் எடுத்தார். ஜேப்டன் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 28 ரன், ஜார்டன் சில்க் 17 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனகேட்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து வென்றது.

Advertising
Advertising

கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44, ஹார்ப்பர் 36 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேமரான் ஒயிட் 29, கூப்பர் 14, பாய்ஸ் 11 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேனியல் கிறிஸ்டியன் 31 ரன் (14 பந்து, 3 சிக்சர்), ரிச்சர்ட்சன் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேனியல் கிறிஸ்டியன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ரெனகேட்ஸ் பைனலுக்கு முன்னேறியது. மெல்போர்னில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: